Saturday, August 14, 2010

விழித்திருங்கள் மக்களே!

என்னவள் ஆப்பிள் வேண்டும் என்றாள். சரி போனா போகுது என்று ஒரு கடைக்குள் சென்றோம். கடை நல்லா பளபளன்னு மின்னிச்சு. பெங்களூர்ல இந்த மாதிரி கடைகளுக்கு பஞ்சமே இல்ல. அத வாங்கினா இது இலவசம், இத வாங்கினா அது இலவசம்ன்னு பெரிய பெரிய விளம்பரங்கள் வேற. ஏதோ ஒரு வகை ஆப்பிள் கிலோ Rs.99/- எழுதி வைத்திருந்தார்கள். அது தான் வேண்டும் என்று நான் சொல்ல, என்னவள் அந்த வகை ஆப்பிள் தனக்கு பிடிக்காது என்று, வேறு வகையை எடுத்தாள். நான் விடுவேணா!! எனக்கு அது தான் வேணும் என்று அடம்பிடித்து, அதில் ஒரு 400g எனக்காக எடுத்துட்டு வந்தேன்.

வேறு சில பொருள்களையும் எடுத்துட்டு பில் போட்டு வாங்கி வந்தேன். என்னைக்கும் இல்லாமல் இன்னைக்கு பில்லை சரி பார்த்தேன். அட ராமா நான் விரும்பி எடுத்த ஆப்பிலை கிலோ Rs.109/- ன்னு போட்டிருந்தது.

அடேங்கப்பா, எப்படி எல்லாம் ஏமாத்துகிறார்கள். தெரியாமல் நடந்த genuine mistake -ஆ இருக்கலாம். இருந்தாலும் ஏமாறரது யாரு? அடிச்சுட்டாண்டா அம்பி! நான் விடுவேணா, போனேன் பில் கவுண்ட்டருக்கு,... நீட்டினேன் பில்லை.... அந்த கவுண்ட்டரில் இருந்த தம்பி அவருடைய மேலதிகாரியை கூப்பிட்டார். அவர் உடனேயே ஆப்பிள் இருந்த இடத்திற்கு போயி பார்த்து விட்டு, ஒரு 15 நிமிஷம் நோட்டம் விட்டார். விலை எழுதியிருந்தது ஒரு ஸ்லேட்டில். நான் கூட அதை மாற்றி எழுத போகிறார் என்று நினைத்து, நல்ல சண்டை போடலாமென்று சட்டையை எல்லாம் மடித்து நின்னிட்டிருந்தேன்.

அவர் என்னிடம் வந்து, நீங்க சொன்னது சரி தானுங்கண்ணா. இந்தாங்க மீதி நாலு ரூபாய் என்றார். புஸ்ஸுண்ணு போச்சு! என்னவோ சண்டை ஏதும் இல்லாமல் வீட்டிற்கு வந்தது என்னவளுக்கென்னவோ சந்தோஷம் தான்!

ஆகவே மக்களே, விழித்திருங்கள்! இதை எல்லாம் விட, நான் நாலு ரூபாய்க்காக ஒரு 30 நிமிஷம் காத்திருந்தது அங்கே வந்த மற்ற மக்களுக்கு ஒரே வேடிக்கையாக இருந்தது. சிலர் சிரித்தார்கள். ஆனால், நான் சென்ற பிறகு அவர்களும் பில்களை சரிபார்த்திருப்பார்கள் என்று எனக்கு தெரியும். இது சும்மா நாலு ரூபா தான், ஆனால்.... சரி சரி நான் என்ன கருத்து சொல்ல வர்ரென்னு உங்களுக்கு புரிஞ்சுருச்சுன்னு தெரியுது.

ஓ! அது என்ன கடைன்னு கேக்கறீங்களா? அது.. அது.. "நிறையா". கண்டுபிடி, கண்டுபிடி, கடைய கண்டுபிடி.. :)

No comments:

Post a Comment