www.itsdiff.com தமிழிசை ரேடியோ கேட்டுக் கொண்டிருந்தேன். அங்கு “உங்களை பொறுத்தவரை எது அழகு?” என்று கேட்டார்கள். என்னை பொருத்தவரை அன்பே அழகு. எவ்விடத்தில் அன்பிருக்கிறதோ அவ்விடம் அழகிருக்கிறது.
பின்பு அவர்கள் நீங்கள் நினைக்கும் ஒரு 10 அழகுகளை வரிசை படுத்த சொன்னார்கள். இது என் டாப்-10 அல்ல, மொத்தம்.
அம்மாவின் முகம் அழகு,
அப்பாவின் சிரிப்பு அழகு,
அக்காவின் பாசம் அழகு,
தாத்தாவின் தன்னம்பிக்கை அழகு,
பாட்டியின் தாத்தாவுடன் சண்டைகள் அழகு,
என் தோட்டம் அழகு,
என் ஊர் சிவன் கோவில் அழகு,
எங்கள் ஊர் பொங்கல் விழா அழகு,
அக்காவின் மகன், மகள் அழகு,
என் காதல் அழகு!
பி.கு : இது என்னுடைய பழைய பதிவின் மறுபதிப்பு :)
No comments:
Post a Comment